நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுத ஆரம்பித்து இருக்கிறேன். இன்று அமாவாசை. தர்பணம் செய்யும் நாள். இறந்த ஆன்மாக்கள் நமது இல்லம் தேடி வருவதாக கூறப்படும் நாள். அமாவாசை என்பது நிலவின் வெளிச்சம் இல்லாத ஒரு நாள். பூமியுடன் சேர்ந்து சுற்றும் நிலவு இன்று பூமியின் கண்களில் இருந்து மறைந்து இருக்கும் நாள். அதே நிலவு தன் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியின் பக்கம் காட்டி கொண்டு சுற்றி வருகிறது. இதை வார்த்தைகளில் எளிதாக விளக்குவது சற்றே கடினம். மனிதர்கள் நிலவின் மறுபக்கத்தை பூமியில் இருந்து பார்த்தேயில்லை.
நம் பூமியின் ஆதாரமே சூரியன் தான். பூமி சூரியனை வருகிறது அதே நேரத்தில் தானும் சுலன்று கொண்டே வருகிறது. நிலவுக்கும் இதே விதி தான் ஆனால் நிலவு பூமியை சுற்றி வருகிறது. இதில் நிலா பூமி ஒரே சீறாக சுற்றுகிறது. இதன் வேகத்தில் மாற்றம் ஏற்படுவது இல்லை.
ஆன்மா - மனிதன் இறப்பிற்கு பிறகு தன் உடலை விட்டு ஆன்மாவாக வெளியேறி இந்த உலகத்தை சக்தி வடிவமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இறந்த ஆன்மாவானது நிலவின் ஒளியை உண்டு வருவதாகவும் அமாவாசை நாளில் ஒளியற்ற நிலையில்.உணவின்றி இருப்பதாகவும்.